மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பிரதி வாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் தொற்றா நோய்களுக்கான சிறப்பு முகாம் இந்த வாரம் புராண சிங்க பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட திருமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது 19.03.2022

 

இந்த வாரம் சனிக்கிழமை தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புராணச்சிங்குபாளையம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட திருமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது இதில் பரவலான மக்கள் பங்குபெற்று தொற்றா நோய் சிகிச்சைக்கான பரிசோதனைகளை சிகிச்சைகளையும் பெற்று பயன் அடைந்தனர் . இந்நிகழ்வினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர் ஆர்த்தி அவர்கள் துவங்கி வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் அப்பகுதியைச் சார்ந்த ஊர் தலைவர்கள் பங்குபெற்று விழாவினை சிறப்பித்தனர்.

பின்னர் நடைபெற்ற முகாமில் பரவலான பெண்கள் மற்றும் ஆண்கள் தொற்றா நோய் சிகிச்சைகளை பெற்று பயன் அடைந்தனர். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் கருப்பை வாய் புற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பரவலான மக்கள் பரிந்துரைகளையும் சிகிச்சைகளையும் பெற்றனர். நன்றி