மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சுகாதார ஆய்வாளர் நிலை 2 _ திறனாய்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்புகள் கண்டமங்கலம் வட்டாரத்தில் நடைபெற்றது இதில் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம் வட்டாரம் சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் , மக்களை தேடி மருத்துவம் திட்டம் மற்றும் அனைத்து சுகாதார ஆய்வாளர்களுக்கும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர் ஆர்த்தி அவர்களின் தலைமையில் திறனாய்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இதில் சுகாதார மேற்பார்வையாளர் திரு . சங்கர் அவர்கள் சுகாதார ஆய்வாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி விரிவாக ஆய்வு மற்றும் பயிற்சி அளித்தார் . உடன் அனைத்து சுகாதார ஆய்வாளர் நிலை 1 இருந்தனர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் பங்குபெற்று பயனடைந்தனர்.