இன்று உலக காசநோய் தினம் மார்ச் 24 , 2022

 இன்று உலக காசநோய் தினம் - மார்ச் 24



 உலக அளவில் காசநோய பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அனைத்து நலவாழ்வு மையங்களிலும் டிபி முக்ட் பாரத் எனும் , அனைத்து காச நோயாளிகளையும் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான உதவித்தொகை பெற்றுத் தருதல் அவர்களின் விவரங்களை நிக்ஷய் தளத்தில் பதிவிடுங்கள் அதிக நோய்வாய்பபட வாய்ப்புள்ள பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்புதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட,


முன்னேற்பாடு நிகழ்ச்சியாக கண்டமங்கலம் வட்டாரத்தில் டாக்டர் ஆரத்தி வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் தலைமையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து குழுக்கள் வரப்பெற்று அவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் காச நோயைப் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தும் விதம் பற்றியும் முழுமையாகவும் விரிவாகவும் கூறப்பட்டு அதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்களும் கேட்டறிந்தனர்.





இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் சமூதாய செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் காசநோய்க்கான எஸ் டி எஸ் என அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை முழுமைப் படுத்தினர்.