இன்று உலக காசநோய் தினம் TB MUKT BHARAT என்பதால் காசநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து நலவாழ்வு மையங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நமது வட்டாரத்தில் உள்ள பள்ளிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் , காசநோய் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இதன் முதன்மை நிகழ்வாக நமது கண்டமங்கலம் வட்டாரம் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பிரதி வாரம் நடைபெறும் தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை நமது வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் துவங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் உடன் கண்டமங்கலம் வட்டார ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார். அவர்களுடன் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் நிகழ்வினை சிறப்புற நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து நமது வட்டாரத்தில் உள்ள அனைத்து நலவாழ்வு மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் உலக காசநோய் தின சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
காசநோய்க்கான முதலீட்டினை அதிகரித்து உயிர்களை காப்போம்!!!
காசநோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நமது வட்டாரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னார்வலர்கள் புற்றுநோய் அறிகுறி உள்ள மற்றும் நோய் பரவ வாய்ப்பு உள்ள பகுதிகளில் சளி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.
-BLOCK WAR ROOM , KANDAMANGALAM




















































