ராம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வீராணம் கிராமத்தில் சுகாதார திருவிழா 27.04.2022





 கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட ராம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீராணம் கிராமத்தில் சுகாதார பெருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகள் முதல் சிறப்பு மருத்துவர்கள் வரை பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வினை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விழுப்புரம் துரை ரவிக்குமார் அவர்கள் தனது பொற்கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் விழாவின் சிறப்பினை முக்கியத்துவத்தினையும் விலக்கி விழாவினை துவங்கி வைத்தார்.


மேலும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் வீராணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோர் நிகழ்ச்சியினை தலைமை தாங்கி சிறப்பித்து விழாவின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினர்.

மேலும் விழாவின் துவக்க நிகழ்வுகளின் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு துரை ரவிக்குமார் அவர்கள் தனது பொற்கரங்களால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார என் அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மக்கள் நல பதிவினை பெண் சுகாதார தன்னார்வலர்கள் பயன்படுத்தும் வகையில் கையடக்க டேப் செல்பேசி முப்பத்தி ஒரு நபர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் மக்களைத் தேடி மருத்துவர் திட்ட புதிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியினை துவங்கி வைத்து பின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்து வைத்திருந்த ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் தோல் நோய் குறித்த கண்காட்சி திடல் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கான திடல் காசநோய் குறித்த விழிப்புணர்வு திடல் மற்றும் காச நோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை பார்வையிட்டு செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் மேலும் பொது மருத்துவம் தோல் மருத்துவம் கண் மருத்துவம் ,  காது மூக்கு தொண்டை மருத்துவம் சித்தா மருத்துவம் பெண்களுக்கான மார்பக பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை ஈசிஜி பரிசோதனை இரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை ஹீமோகுளோபின் பரிசோதனை கண் குறைபாடுகள் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் பயனாளிகளுக்கான மருந்தகம் அமைக்க மக்கள் பங்கு கொண்டு பயன் அடைந்தனர்.