உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மக்களுக்கான சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது. மேலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்வின் இறுதி நிகழ்வாக அனைவரும் புகையிலை பொருட்களை தவிர்ப்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர். மேலும் இந்நாளில் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விளக்கப்பட்டு,
வட்டாரத்தில் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுத்திடும் வகையில் ஆய்வு பணிகள் மற்றும் புகையிலை சம்மந்தமான விளம்பரங்களை அகற்றுதல் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களில் அபராதம் விதித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.














