குமளம் கிராமத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் 30.07.2022

 


முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமானது கண்டமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட புராணசிங்குப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட குமளம் நலவாழ்வு மையம் ,  குமளம் கிராமத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் R.லட்சுமணன் ,.MBBS .D.ortho.MLA அவர்களால் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைக்கப்பட்டு எஸ் எஸ் வாசன் ஒன்றிய பெருந்தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் விழாவானது நடைபெற்றது .




மேலும் நிகழ்ச்சியில் வரவேற்புரை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வட்டார மருத்துவ அலுவலர் R.ஆர்த்தி MBBS.,DPHM.அவர்களால் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் சிறப்பு மருத்துவர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கினர்.

மேலும் முகாமிற்கான முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் அவர்களின் தலைமையில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தது மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பக்தவச்சலம் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கான முகாம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் முகாம் நிகழ்வினை பற்றிய அறிவிக்கை தெரிவிக்கப்பட்டு இருந்தது.


முகாமில் திரளான மக்கள் பங்கு கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழ்நாடு மக்கள் நல பதிவு எண் ஆனது வழங்கப்பட்டு சிறப்பான முறையில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவானது பரிசோதிக்கப்பட்டது மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியானது செலுத்தப்பட்டு முகாமில் உள்ள அனைத்து திடல்களிலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


Actionaid  தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் முகாமில் பங்கு கொண்ட மக்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது மேலும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மற்றும் செலுத்திக் கொள்ளாத நபர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.


முகாமில் கொரோனா தடுப்பூசி திடல் ,  தொழுநோய் பரிசோதனை திடல் ,  டெங்கு மலேரியா நோய் கட்டுப்படுத்துதல் திடல் ,  குடும்ப நல முறைகள் திடல் ,  மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனைகள் திடல் ,  ஆய்வகங்கள் மற்றும் இயன்முறை மருத்துவம் மற்றும் நோய் ஆதரவு சிகிச்சை

சித்த மருத்துவ பிரிவு பொது மருத்துவம் ,  மூட்டு வலி மற்றும் எலும்பு சிகிச்சைகள் , கண் மருத்துவம், பல் மருத்துவம் இசிஜி கர்ப்பிணி தாய்மார்களுக்கான அல்ட்ரா சானிக் ஸ்கேன் பரிசோதனை மேலும் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. 

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் எக்ஸ்ரே பரிசோதனை ஆனது செய்யப்பட்டது மற்றும் இரு வார இருமல் உள்ள நோயாளிகளுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.