புருஷானூர் கிராமத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாம் , விழிகள் இயக்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இன்று நடைபெற்றது. 07.08.22
🇭🇺 கண்டமங்கலம் வட்டாரம்
🏥சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
சார்பாக
👩👩👧👧 புருஷானூர் கிராமத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் , விழிகள் இயக்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் , வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் மற்றும் V. அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.
மக்கள் அனைவருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கண் காது மூக்கு தொண்டை தோல் எலும்பு சிகிச்சைகள் பொது மருத்துவம் மற்றும் சிறப்பு மருத்துவர் குழுக்கள் மக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கியது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை , தொழுநோய் , மலேரியா இரத்த தடவல் எடுக்கப்பட்டது.
இதில் முக்கியமாக நிகழ்வாக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் , காசநோய் அறிகுறி உள்ள நபர்களுக்கு , நடமாடும் X-ray வாகனம் மூலம், X-Ray எடுக்கப்பட்டது.

















