கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பள்ளிநேலியனூர் நல வாழ்வு மையத்தின் ஆழியூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களை கண்டறியும் சிறப்பு முகாம் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் முகாம் நிகழ்வில் ஆரியூர் கிராம மக்கள் பங்கு கொண்டு தொற்ற நோய்களுக்கான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பெண்களுக்கான கர்ப்ப ப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் முதியோர்களுக்கான கண் பரிசோதனைகள் மலேரியா இரத்த தகவல் மற்றும் தோல் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் காசநோய் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.