சிறப்பு பாராட்டுகள் , மூவண்ணக் கொடியேற்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் விழுப்புரம் அவர்களின் சான்றிதழ்கள், பாராட்டுக்கள் 15.08.2022
75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெரு விழாவினை முன்னிட்டு நமது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக நன்முறையில் சிறப்பாக சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட நமது வட்டார மருத்துவ அலுவலர் , மருத்துவர் , செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுதந்திரத் திருநாளில் நற் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் . உடன் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அவர்கள் பங்குபெற்று துறை அலுவலர்களை அறிமுகப்படுத்தி விழாவினை சிறப்பித்தனர்.

முன்னதாக, நமது கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தில் முக்கிய நிகழ்வாக கொடி ஏற்றமானது மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் , அனைத்து செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் அவர்களின் முன்னிலையில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிகழ்த்தப்பட்டது.
மேலும் நமது வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் துணை சுகாதார நிலையத்தில் சார்பாக கிராம சுகாதார அரசு செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் , இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார் அவர்கள் கலந்துகொண்டு சுகாதாரத் திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் மக்கள் இடையே காணப்படும் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான வழிமுறைகளை வழங்கினார்.
நமது வட்டாரத்திற்கு அருகில் உள்ள நெட்டப்பாக்கம் டிவிஎஸ் லூகாஸ் கம்பெனி ஊழியர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி பணியினை செய்தமைக்காகவும் நமது வட்டாரத்தில் திறம்பட இயங்கும் நமது சுகாதாரத் துறையினரை பாராட்டியும் 75வது சுதந்திர தின விழா நிகழ்வில் பரிசு வழங்கப்பட்டது











