கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமானது 16 ஆகஸ்ட் 2022 முதல் 3 செப்டம்பர் 2022 வரை வீடு வீடாகச் சென்று உணர்ச்சியற்ற தேமல் இருக்கிறதா என ஆய்வு செய்து தொழுநோயாக இருக்கலாம் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தி மக்களுக்கு தொழுநோயிலிருந்து விடுபட களப்பணியாளர்கள் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படும் வகையில் நமது வட்டாரத்தில் களப்பணியானது இன்று முதல் துவங்கப்பட்டது.
துவக்க நிகழ்வானது பூவரசன்குப்பம் நல வாழ்வு மையத்தின் பூவரசன்குப்பம் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் முன்னிலையில் மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் அவர்களின் தலைமையில் துவக்க நிகழ்வானது நடைபெற்றது நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நல வாழ்வு மையத்தின் சுகாதார ஆய்வாளர் இடைநிலை சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் , பெண் சுகாதாரத் தன்னார்வலர் மற்றும் மக்கள் பங்கு பெற்றனர் மேலும் அப்பகுதியில் ஒலிபெருக்கியின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது மேலும் வீடு தோறும் சென்று களப்பணி பார்வையிடப்பட்டது.
மேலும் வட்டாரம் முழுவதிலும் சுமார் 80 குழுக்கள் ஆண் பெண் என இரு களப்பணியாளர்கள், மொத்தம் 160 களப்பணியாளர்கள் வட்டாரத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையையும் தோல் பரிசோதனை செய்து தொழுநோய் கண்டறியும் களப்பணியினை மேற்கொள்கிறார்கள்.
























