சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 75 ஆவது சுதந்திர திருநாள் , அமுதப் பெருவிழா நிகழ்வு சிறப்பிக்கும் வகையில், மூவண்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது
சுதந்திர இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தினை பெருமைப்படுத்தும் , சுதந்திர திருநாள் அமுத திருநாள் நிகழ்வு , இன்று முதல் சுதந்திர தின நாள் வரை அனைத்து வீடுகளிலும் அரசு அலுவலகங்களும் தொழில் நிலையங்களிலும் நமது மூவண்ண தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிக்கும் வகையில், நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்தாளணர்கள் , செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் சிறப்பிக்கப்பட்டது. மேலும் நமது வட்டாரத்திற்கு உட்பட்ட 31 துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களின் முன்னிலையில் தேசியக் கொடியானது ஏற்றப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






















