கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பிளாக் வார் ரூமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் வட்டார சுகாதார பேரவை குழு கூட்டமானது நடைபெற்றது . கூட்டத்தினை ஒன்றிய பெருந்தலைவர் திரு ஆர் எஸ் வாசன் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி அவர்கள் பொருள் உரை வழங்கி நிகழ்வின் முக்கியத்துவத்தினை அனைத்து துறை அலுவலர்களுக்கும் விளக்கி பேசினார் . மேலும் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் , மருத்துவ அலுவலர் அவர்கள் , தலைமை ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து துறை அலுவலர்களும் பேரவை கூட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர். சுகாதார மேம்பாட்டிற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு தந்து உதவ கேட்டுக்கொள்ளப்பட்டது .
மேலும் வட்டாரத்தின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் முக்கியத்துவம் அடைந்து மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மக்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல் நிகழ்வில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்போது பரவி வரும் ப்ளு காய்ச்சலை எதிர்கொள்ள அனைத்து தலைவர்களும் வார்டு உறுப்பினர்களும் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து காய்ச்சல் கண்ட குழந்தைகளையும் பெரியோர்களையும் உடனடியாக மருத்துவ துறையுடன் கடந்தோசித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானங்கள் ஏற்கப்பட்டது.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின் முக்கியத்துவம் அறிந்து கிராமப்புறங்களில் அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம் அமைத்து சத்தான காய்கறிகளை வளர்த்து மக்களுக்கு ஆர்வம் மற்றும் வகையில் அமைத்துத் தர கேட்டுக் கொள்ளப்பட்டது.
டெங்கு மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கொசுப் புகையானது அடிக்கப்பட வேண்டும் என்றும் , நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலும் குளோரின் ஏற்றம் செய்து மக்களுக்கு குடிநீரினை விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏதேனும் சுகாதார குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையுடன் தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கிட அனைத்து தலைமை ஆசிரியர்களும் முதலீடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட பல்துறை அதிகாரிகள் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியுரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் அவர்கள் தெரிவித்துக் கொண்டு அனைத்து துறையினருடன் ஒத்துழைத்து மக்களின் நலன் காக்க உதவிட கேட்டுக்கொண்டார்.


























