தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் கண்டமங்கலம் வட்டாரத்தில் தேசிய குழுவானது , மக்கள் நல பதிவு (TNPHR) மற்றும் காசநோய் கண்டறிதல் குறித்த கள ஆய்வினை மேற்க்கொண்டனர் 19.09.2022

2022 

கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குழுவானது காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கவும் மேலும் சிறப்பு நிகழ்வாக மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் விழுப்புரம் சுகாதார மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் 
 பணிகள் பற்றியும் , மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்கள் நலப்பதிவு குறித்த கள விவரங்களை கண்டறியும் மத்திய குழுவானது வந்திருந்து நிகழ்வுகளை களத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வுகளில் தேசிய குழு உடன் இணைந்து ,  விழுப்புரம் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் காசநோய் ஒழிப்பு திட்டம் , வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் பணி புரியும் காசநோய் களப்பணியாளர்கள் பங்கு கொண்டனர்.

தேசிய குழுவிற்கு மக்கள் நலப் பதிவு செயலியை நிகழ்கால காணொளியாக இடைநிலை சுகாதார செவிலியர் அவர்களால் செய்து காட்டப்பட்டது 


துணை இயக்குனர் சுகாதாரப் பணி அவர்கள் பேசிய குழுவுடன் உரையாடல்


காசநோய் பயனாளிகளுக்கு அவர்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் மாநில காசநோய் ஒழிப்பு திட்டத்தின் அதிகாரிகள் பங்குகொண்டு வழங்கினர்


துணை இயக்குனர் காசநோய் ஒழிப்பு திட்டம் அவர்கள் , தேசிய குழு உடன் இணைந்து நலக்கல்வி பதாதைகளை வெளியிட்டார்



தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் இணைச்செயலாளர் தேசிய குழு மரக்கன்று நடும் நிகழ்வு