V நெற்குணம் மற்றும் நரசிங்கபுரம் கிராமங்களில் டெங்கு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் மற்றும் கொசுப் புகையானது அடிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கொசுப்புழு கண்காணிப்பு களப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்திற்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் டெங்கு நோய் பாதித்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பில் மற்றும் காய்ச்சல் உடன் இருந்தவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேலும் அப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு களப்பணியில் கொசுப்புழு ஒழிப்பு பணியினை களப்பணியாளர்கள் மேற்கொண்டனர் மேலும் சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியில் மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல் கண்ட நபர்களுக்கான கபசுர குடிநீர் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மருத்துவ முகாம் அமைத்து வழங்கினர் மென்மேலும் அந்தி சாயும் நேரத்தில் கொசுப் புகையானது அப்பகுதி முழுவதும் அடிக்கப்பட்டு அப்பகுதியானது வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது









