தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா நிகழ்வானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வரும் நிலையில் ஜோதி ஓட்டமானது விழுப்புரத்தினை வந்தடைந்தது இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜோதியானது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் ஜோதியினை ஒப்படைத்து விழாவினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் விழுப்புரம் சுகாதார மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் மருத்துவ அலுவலர்களும் வட்டார மருத்துவ அலுவலர்களும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் பங்கு கொண்டு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி உற்சாகப்படுத்தினர் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்த அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகள் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது.





















































