ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மற்றும் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து , கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 07.01.23
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஆனது இன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் குத்துவிளக்கேற்றி நிகழ்வினை துவங்கி வைத்தார் மேலும் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் முன்னிலையில் அனைத்து பணியாளர்களுக்குமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.


































