கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் ஆனது நடைபெற்றது இதில் அனைத்து நலவாழ்வு மையங்களில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் , இடைநிலை சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பள்ளிகளுக்கு சென்று தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் நலக் கல்வி அளித்து , மாணவர்களுக்கு தொழுநோய் அறிகுறிகளை விளக்கி கூறி சமுதாயத்தில் அறிகுறிகளுடன் உள்ள நபர்களை கண்டறிந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் மாணவர்களுக்கு தோல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக சிறுவந்தாடு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் , கிராம ஊராட்சி தலைவர் , ஒன்றிய செயலாளர் அவர்கள் பங்கு கொண்டு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணப் பணியாளர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நிகழ்வானது நடைபெற்றது.
























