மாவட்ட சுகாதார பேரவை குழு கூட்டம் , மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன்னிலையில் அனைத்து வட்டார அலுவலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது

கிராம சுகாதாரப் பேரவை மற்றும் வட்டார சுகாதார பேரவை குழு கூட்டங்களின் தொடர்ந்து மாவட்ட அளவில் சுகாதார பேரவை குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார அலுவலர்கள் ஒன்றிய பெருந்தலைவர்களின் முன்னிலையில் சிறப்பான முறையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டாரத்தில் சுகாதாரத் துறை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை முன்மொழிந்து அனைத்து வட்டார அலுவலர்களும் கோரிக்கைகளை கலந்து பேசி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.