பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 1.2.23
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்பர்ஸ் தொற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் ஆனது நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் அனைத்து மாணவர்களும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றனர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த மருத்துவ அலுவலர் அவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் , செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கு கொண்டு நிகழ்வினை சிறப்பித்து மாணவர்களுக்கு நலக்கல்வி வழங்கினர்.





