தேசிய குடற்புழு நீக்க நாள் 14.02.2023 கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டது
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்த சோகை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பென்டசோல் (Albendazole) மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே தமிழக அரசு இந்த சிறப்பு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை செயல்படுத்தி வருகின்றது.
அதன்படி குடற்புழு நீக்க மாத்திரைகள் நமது வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200mg அளவு கொண்ட அரை மாத்திரையும் (2 மாத்திரையும்), 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 400mg அளவு கொண்ட ஒரு மாத்திரையும் (1 மாத்திரையும்) வழங்கப்படுகின்றது. இந்த முகாம்களுக்கு தேவையான அளவு குடற்புழு நீக்க மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுலவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இம்முகாம்கள் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். எனவும் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்கள் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றி நிகழ்வினை துவங்கி வைத்து மக்களுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.





















































