கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சித்தலம்பட்டு கிராமத்தில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நிகழ்வானது அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளின், ஒரு பகுதியாக, கண்டமங்கலம் வட்டாரத்தில்,  புராணசிங்கு பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தலம்பட்டு கிராமப் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்குமான ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் ஆனது நடைபெற்றது.

இந்நிகழ்வில் முந்திய பெருந்தலைவர் அவர்கள் தலைமை ஏற்று விழா துவங்கி வைத்தார் மேலும் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் முன்னிலையில் சித்தலம்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின்  ஒத்துழைப்புடன் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணையானது நடைபெற்றது இதில் திரளான மாணவர்கள் அனைவரும் பங்கு கொண்டு தொழுநோயினைப் பற்றிய விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கினர். 
விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அவர்கள் முன்நின்று சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார செவிலியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.