யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் , கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய யானைக்கால் நோய் உள்ள பயணிகளுக்கான தினசரி உபயோகிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டது
யானைக்கால் நோயை ஒழிக்கும் பொருட்டு ஒட்டு மொத்த டிஇசி மாத்திரை வழங்கும் திட்டம் 1998 முதல் 2014 வரை 2 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் வருடம் தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் இந்நோய் தற்பொழுது பரவக்கூடிய நிலையில் இல்லை என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு செல்கிறது.
தற்பொழுது யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிப்பு என்ற இலக்கினை நோக்கி சென்றபோதிலும், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு யானைக்கால் நோய் நிலை 4-இல் தமிழகத்தில் 8,023 நபர்கள் தற்போது பாதிப்பில் உள்ளனர். நிலை 4-ல் உள்ளவர்களுக்கு கால் வீக்கம், தோலில் புண்கள் மற்றும் நீர்வடிதல் ஆகியவை காணப்படும்.
இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உதவித்தொகையாக மாதம் ரூபாய்.1000/- மற்றும் யானைக்கால் பராமரிப்பு உபகரணங்கள் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கிலேயே மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மூலமாக செலுத்தப்படுகிறது.
மேலும், கால்களில் உள்ள புண்கள் பராமரிப்பதற்காக பிளாஸ்டிக் பேசின், குவளை, ஸ்டூல், சோப்புப்பெட்டி, சோப்பு, துண்டு மற்றும் மாத்திரைகள், களிம்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்நோயாளிகளுக்கு தன் சுத்தம் பற்றியும் கால்களை பராமரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.
