உலக மகளிர் தினக் கொண்டாட்டம் , கண்டமங்கலம் வட்டாரம் 2023


 



நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த பயனாளிகளுக்கு சிறப்பு செய்வது தொடர்பாக நமது கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள பிளாக் வார்மில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய தொற்றா நோய்கள் செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பான முறையில் உலக மகளிர் தினமானது கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்கள் முன்னிலை வகித்து அனைவரும் வரவேற்று உரை நிகழ்த்தினார் மேலும் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த பயனாளிகள் அனைவரும் இணைந்து குத்து விளக்கு ஏற்றி விழா நிகழ்வினை துவங்கி வைத்தனர் மேலும் அனைத்து மக்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுனை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அனைத்து பயனாளிகளுக்கும் கௌரவிக்கப்பட்டனர் மேலும் இந்நிகழ்வில் ஈக்வோட்டர்ஸ் வங்கியிலிருந்து பையனாளிகளுக்கான சிறப்பு பங்களிப்பினை வழங்கினர்