உலக மலேரியா தினம் சிறப்பு நிகழ்வுகள் 25 04.2023

 











உலக மலேரியா தின உறுதிமொழி

நாள் 25.04.2023

1. நான் எனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ யாருக்கேனும் காய்ச்சல் எனத் தெரிந்தவுடன், அவர்களை மலேரியாவுக்கு இரத்த பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவேன்.

2. மலேரியா காய்ச்சல் என உறுதி செய்தவுடன், அவர்களை பூரண சிகிச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்துவேன்.

3. மலேரியா நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், மாதந்தோறும் இரத்த தடவல் எடுத்து, மலேரியா இல்லை என உறுதி செய்யும் வகையில், ஒரு வருடம் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கச் செய்வேன்.


4. தண்ணீர் சேமித்து வைக்கும் மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், சிமெண்ட்தொட்டிகள் மற்றும் கிணறுகளை கொசு புகாவண்ணம் மூடி வைப்பேன்.

5. அரசு மேற்கொள்ளும் மலேரியா நோய் கண்காணிப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், அவற்றை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

6. மலேரியா நோய் பரவலை இந்தியாவில் 2027-ல் முற்றிலுமாக ஒழித்து 2030-ல் மலேரியா நோய் இல்லாத நாடு என்ற இலக்கினை அடைய பாடுபடுவேன். என்று உளமாற உறுதிமொழி கூறுகிறேன்.
.