உலக மக்கள் தொகை தினம் - 2023 , கண்டமங்கலம் வட்டாரம் சிறப்பு ரத ஊர்வலம், உறுதிமொழி நிகழ்வுகள் 11.07.2023

உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கண்டமங்கலம் வட்டாரத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் சிறப்பு ரத ஊர்வலமானது ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வானது ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு குடும்ப நல முறைகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினை பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்திட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறப்பான முறையில் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் முன்னிலையில் சிறப்பான முறையில் விழா நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கப்பட்டது.












































 கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு வட்டார அளவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வானது நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் சுகாதார மேற்பார்வையாளர் அவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என சுகாதாரத்துறை சார்ந்த அனைவரும் பங்கு கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.