நவமால்மருதூர் ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக 15 நபர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்து நீர் பருகியதால் , வயிற்றுப்போக்கு பாதிப்பு
களப்பணியின் பொழுது கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் நோய் பாதிப்பு ஏற்பட்ட கிராமத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைப்புகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
இல்லம் தோறும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் வகையில் ஸ்பாட் குளோரி நேசன் செய்யப்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நோய் பாதிப்பு ஏற்படுத்த நபர்கள் வீட்டில் நேரடியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் குழுவானது விசாரணை கொண்டு நோய்வாதிக்கப்பட்ட ஏதேனும் அவர்கள் வீடுகளில் உள்ளன ஆய்வு செய்து அவர்கள் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளை சுற்றிலும் தோற்று நீக்கம் செய்ய ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதார முறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
24 மணி நேரம் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் துணை சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டு இரவு நேர திடீர் வாய்விட்டுப் போக்குகளை சமாளிக்கும் வகையில் மருத்துவ குழுவானது களத்தில் இருந்தது.
தீவிர சிகிச்சைகளில் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு சென்று வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டாரத்திற்கு உட்பட்ட உயர் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு சிகிச்சையில் உள்ள நபர்களை ஆறுதல் தெரிவித்து சிறப்பான சிகிச்சை வழங்க அறிவுறுத்தினர்.
களப்பணியில் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்ந்த மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் குழுவினர் சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும்
நோய் பாதிப்பு ஏற்படுத்தல் இருந்து நடமாடும் மருத்துவக் குழுவானது வீதிகள் தோறும் முகாமினை அமைத்து அங்குள்ள மக்களுக்கான சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றனர்.
24 மணி நேர சிறப்பு மருத்துவ குழுவானது திடீர் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வீடுகளுக்கே சென்று அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தல்.
குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய நீர் தொட்டிகளின் மூலம் மக்களுக்கு குடிநீர் ,குளோரினேசன் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நவமால்மருதூர் ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக 15 நபர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்து நீர் பருகியதால் , வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , முண்டியம்பாக்கம் , ஆகிய மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கண்டமங்கலம் வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மருத்துவக்குழு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்கள் கிராமத்தில் முகாமிட்டு வீடு வீடாக சென்று மக்களுக்கு நலக் கல்வி மற்றும் குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுகுகளை ஊராட்சி மன்றத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக அந்த குழாய்களை அப்புறப்படுத்தி புதிய இணைப்புகளை வழங்க ஏற்பாடுகள் செய்து நோய் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை மற்றும் பரிந்துரைகளை மேற்கொண்டு மருத்துவ முகாம் ஆனது 24 மணி நேரமும் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ள.
கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு நலக்கல்வி மற்றும் நீர் கொள்கலன்களில் செய்து பயன்பாட்டில் வைக்க அறிவுறுத்தி நவம்மாள்மருதூர் கிராமம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.