கண்டமங்கலம் சுகாதார பேரவை கூட்டம் 25.09.2023

கண்டமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் கிராம சுகாதார பேரவை கூட்டமானது நடைபெற்றதனை தொடர்ந்து,  அந்த தீர்மானங்களின் அடிப்படையில்,  கண்டமங்கலம் வட்டார அளவிலான சுகாதார பேரவை குழு கூட்டமானது இன்று 25.09.23 கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,  பயிற்சி அரங்கில், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அவர்களின் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் முன்னிலையில் கிராம பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு நமது வட்டாரத்தின் சுகாதார மேம்பாட்டிற்கான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

நிகழ்வின் முக்கிய நிகழ்வாக வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசு பல்கும் இடங்களை குறித்து வட்டார அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார், டெங்கு  நோய் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களின் கண்காட்சி மற்றும் குடும்ப நல முறைகள் குறித்த  கண்காட்சியினை விளக்கி கூறினார்.